ராய் கா பாக் அரண்மனை எனும் இந்த மாளிகை ராய் கா பாக் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது. இது முதலாம் ஜஸ்வந்த் சிங் மஹாராஜாவின் ராணியாகிய ஹாடிஜி என்பவரால் 1663ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
எண்முக வடிவில் காட்சியளிக்கும் இந்த மாளிகை இரண்டாம் ஜஸ்வந்த் சிங் மஹாராஜாவின் விருப்பத்துக்குரிய இருப்பிடமாக திகழ்ந்துள்ளது. இங்குள்ள பொது அரங்கு 1883ம் ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதி ஜோத்பூருக்கு வருகை தந்தபோது மக்களைச் சந்திப்பதற்கு பயன்பட்டிருக்கிறது.
இந்த அரண்மனையின் சூழலில் மட்டுமே யோகியின் உரைகளைக்கேட்பதற்கு மன்னர் விரும்பியதாக உள்ளூர் நம்பிக்கைகள் நிலவுகின்றன. தற்போது இந்த அரண்மனையில் ஜோத்பூரின் வருவாய்த்துறை அலுவலகம் இயங்கி வருகிறது.



Click it and Unblock the Notifications