ஷாப்பிங் பிரியர்களுக்கு மிகவும் பொருத்தமான இடம் ஜோத்பூர் என்றால் அது மிகையில்லை. ஜோத்பூர் நகரத்தில் சோஜடி கேட், ஸ்டேஷன் ரோடு, திரிபோலியா பஜார், மோச்சி பஜார், நய் சரக் மற்றும் கிளாக் டவர் போன்ற பிரசித்தமான மார்க்கெட் பகுதிகள் உள்ளன.
இங்கு பயணிகள் உள்ளூர் கைவினைப்பொருட்கள், துணி வகைகள், மசாலாப்பொருட்கள், பரிசுப்பொருட்கள், வண்ணச்சாய புடவைகள், பின்னல் புடவைகள், நகைகள், பூத்தையல் வேலைப்பாடு கொண்ட காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம்.



Click it and Unblock the Notifications