ஜோர்கட் நகரத்தில் உள்ள மற்றுமொரு புகழ் மிக்க சுற்றுலாத் தலம் பில்வேஸ்வர் சிவன் கோவிலாகும். தெற்கு ட்ரங்க் சாலையில், வடக்கு மாவட்டப் பகுதியில் உள்ள இந்த பழமையமான கோவில், ஜோர்கட் நகரத்திலிருந்து 35 கிமீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலை எண் 37-ல் அமைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுவதும் வந்து செல்லும் இடமாக இந்த கோவில் விளங்குகிறது.
ருசிநாத் பர்கோஹைய்ன் என்பவரால் கட்டப்பட்ட ஒரு புனித குளம் ஒன்றும் இந்த கோவிலில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாக இருக்கும் இந்த கோவிலின் அழகை கூட்டும் இடமாக இந்த குளம் உள்ளது.
இந்த கோவில் அஹோம் வம்சத்தவர்கள் மற்றும் குடிமக்களின் மத நம்பிக்கைகளின் அடையாளமாக உள்ளது. அஹோம் இனத்தவரின் ஆளுமை உச்சத்தில் இருந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் அவர்களுடைய பிற மத வழிபாட்டுத்லங்களிலிருந்து மிகவும் மாறுபட்ட கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ள இடமாகும்.



Click it and Unblock the Notifications