புரிகோசைன் தேவாலய் ஜோர்கட்டில் உள்ள புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. நகரத்தின் மையத்தில் உள்ள இந்த கோவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்; மக்களின் பெருமதிப்பிற்குரிய இடமாகும்.
இந்த கோவிலின் முதன்மை கடவுளாக புரிகோசைன் உள்ளார். இந்த கோவிலில் ஒரு துறவியின் சிலையையும் காண முடியும். இந்த இரண்டு சிலைகளும் ஜெயந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு, முதலில் ராங்பூரிலும் பிறகு தற்போதுள்ள இடத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்று நம்பப்படுகிறது.
அஹோம் இனத்தவர் தங்களுடைய தலைநகரத்தை ராங்பூரிலிருந்து ஜோர்கட்டிற்கு மாற்றிய போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. தாந்திரீக வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த சக்தா பிரிவினருக்கான இடமாக புரிகோசைன் கோவில் உள்ளது.
நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் இந்த கோவிலுக்கு வருவது மிகவும் எளிய விஷயமாகும். மேலும், இது ஜோர்கட் இரயில் நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. நகரத்தின் மற்ற பகுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் ஒரு ஆட்டோ அல்லது வாடகை டாக்ஸிகளில் இந்த கோவிலுக்கு எளிதில் வந்திட முடியும்.



Click it and Unblock the Notifications