Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோர்கட் » ஈர்க்கும் இடங்கள் » தெகியகோவா நாம்கார்

தெகியகோவா நாம்கார், ஜோர்கட்

35

தெகியகோவா போர்நாம்கார் ஜோர்கட்டின் மிகவும் மதிப்பு மிக்க பிரார்த்தனைக் கூடமாகும். ஸ்ரீமன்தா சங்கர்தேவாவின் சீடராக இருந்த மறுமலர்ச்சி துறவியான மாதவ்தேவா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த பிரார்த்தனைக் கூடம் இருக்கும் இடம் தான் காலப்போக்கில் தெகியகோவா என்ற பெயர் பெற்றது.

மக்களிடம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டாக இந்த பகுதிக்கு வந்த மாதவ்தேவா ஒரு பெயர் தெரியாத கிராமத்தில் ஓய்வெடுத்தாக நம்பப்படுகிறது.

அந்த கிராமத்தில் வசித்த மிகவும் ஏழ்மையான மூதாட்டியின் இல்லத்தில் அவர் தங்கியிருக்க கேட்டுக் கொண்டார். தன்னுடைய ஏழ்மை நிலையிலும் கொஞ்சம் சாதத்தையும், உள்ளூரில் கிடைக்கும் சத்தான, இலைகள் நிரம்பிய தெகியா சாக் என்ற தானியத்தையும் அந்த மூதாட்டி துறவிக்கு கொடுத்தார்.

இந்த உணவினால் கவரப்பட்ட துறவி இந்த இடத்தில் ஒரு பிரார்த்தனை மண்டபத்தை கட்ட முடிவெடுத்தார். அதன் காரணமாகவே இந்த இடத்திற்கு தெகியகோவா (கோவா- சாப்பிடுதல்) என்று பெயர் கிடைத்தது.

37-ம் எண் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 3.5 கிமீ தொலைவிலும், ஜோர்கட் நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும் இந்த கிராமம் அமைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் பெருமளவிலான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கிராமத்தில், ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் வரும் பாடோ மாதத்தில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து விடும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed