ஜோர்கட்டில் பிரிட்டிஷார் இருந்ததை நினைவுபடுத்தும் வகையில் உள்ள இடம் ஜிம்கானா கிளப். ஜோர்கட் பகுதியை சுற்றிலுமுள்ள தேயிலை எஸ்டேட்களை நிர்வகித்து வந்த பிரிட்டிஷாருக்கு பொழுதுபோக்கு மையமாக இருக்கும் பொருட்டாகவே இந்த ஜிம்கானா கிளப் 1876-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்த கிளப்பை நகரத்துடன் இணைக்கும் வகையில் ஜோர்கட் நகரத்தின் முதல் ஜல்லிக் கல் சாலை ஒன்றும் போடப்பட்டது.
9-குழிகளை (Holes) உடைய ஜிம்கானா கிளப் கோல்ப் மைதானம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான மற்றும் உலகிலேயே மிகவும் பழமையான மூன்றாவது மைதானமாகவும் உள்ளது.
உண்மையில், இந்த ஜிம்கான கிளப் மைதானத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னத்தில் இணைப்பதற்கான முயற்சிகள் தற்பொழுது நடந்து வருகின்றன.
லான் டென்னிஸ், பில்லியார்ட்ஸ் மற்றும் போலோ போன்ற விளையாட்டுக்களை விளையாடும் வசதிகளும் இந்த மைதானத்தில் உள்ளன. மேலும், இங்கே ஒரு நீச்சல் குளம், பெருங்குடி மக்களுக்கான பார் மற்றும் ஒரு திரையரங்கு ஆகிய பிற வசதிகளும் உள்ளன.
ஒவ்வொரு வருடமும் 19-வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சி.கே.நாயுடு இந்திய கிரிக்கெட் தொடரும் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications