நரசிங்கர் கோயில் மஹா விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகக் கருதப்படும் நரசிங்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். குளிர்காலங்களின் போது இக்கோயிலில் ஸ்ரீ பத்ரிநாத் முனிவர் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நரசிங்கரின் திருவுருவச்சிலை கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாகிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சிலையின் இடது மணிக்கட்டு ஒவ்வொரு நாளும் மெலிந்து கொண்டே வருகிறது.
இங்கு உலவி வரும் நம்பிக்கைகளின் படி, இச்சிலையின் மணிக்கட்டுப் பகுதி கைப் பகுதியிலிருந்து தனியாக உடையும் நாளில், கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு பத்ரிநாத்துக்குச் செல்லும் சாலை நிரந்தரமாக மூடப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications