ஸ்ரீ காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த சஹஸ்ர லிங்க கோயில் நாடெங்கிலுமிருந்து பக்தர்களையும் யாத்ரீகர்களையும் ஈர்க்கிறது. இந்த கோயிலின் பின்னணியில் பல புராணிக ஐதீகக்கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
காளஹஸ்தி நகரத்தின் மிக முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று எனும் பெருமையையும் இந்த சஹஸ்ர லிங்க கோயில் பெற்றுள்ளது. ஒரு காட்டுப்பகுதியின் நடுவே அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு பின்னால் ஒரு அழகான மலையும் காட்சியளிக்கிறது.
கோயிலைச்சுற்றிலும் காணப்படும் இயற்கை எழில் அம்சங்களை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். சஹஸ்ர எனும் சொல்லுக்கு ஆயிரம் என்பது பொருளாகும்.
இங்குள்ள சிவலிங்கத்தில் ஆயிரம் லிங்க வடிவமைப்புகள் பொதிக்கப்பட்டிருப்பதால் இதற்கு சஹஸ்ர லிங்க கோயில் எனும் பெயர் ஏற்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு விஜயம் செய்து பூஜித்தால், இப்பிறவியில் மட்டுமல்லாது முற்பிறவியிலும் ஒருவர் சுமந்த பாபங்கள் கழுவப்படும் என்பது ஐதீகம்.



Click it and Unblock the Notifications