காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த ஸ்ரீ சக்ரேஷ்வர ஸ்வாமி ஆலயம் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய லிங்கத்தை கொண்டுள்ளது. நகரத்துக்கு அருகில் உள்ள சிறிய மலையில் இந்த ஸ்ரீ சக்ரேஷ்வர ஸ்வாமி ஆலயம் வீற்றிருக்கிறது.
புதையுண்டிருந்த இந்த புராதன கோயில் 1960ம் ஆண்டு ஒரு குடியானவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் நிகழ்த்தப்பட்ட அகழ்வுத்தோண்டலில் கருவறை மற்றும் மூலவரோடு கூடிய அமைப்பு முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டது.
1200 வருடங்கள் பழமையுள்ளதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த கோயில் 1500 வருடங்கள் பழமையுடையது என்றும் உள்ளூர் மக்களால் கூறப்படுகிறது. காளஹஸ்தி நகர மையத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த கோயில் வீற்றிருக்கிறது.
மற்ற கோயில்களோடு ஒப்பிடும்போது அளவில் சிறியதாக இருந்தாலும் இந்த ஸ்ரீ சக்ரேஷ்வர ஸ்வாமி கோயில் அதிக அளவிலான பக்தர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சிறியக்கோயிலில் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதும் ஒரு சுவராசியமான அம்சமாகும்.



Click it and Unblock the Notifications