கல்பெட்டாவின் புகழ்பெற்ற ஜைன கோயில்களில் ஒன்றான கூட்டமுண்டு கண்ணாடி கோயில், கல்பெட்டா நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளாரிமலா எனும் மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் மிகச் சிறந்த ஜைன துறவி பர்ஷ்வநாத சுவாமியை கௌரவிக்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது.
கூட்டமுண்டு கண்ணாடி கோயில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளால் மிகவும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடிகள் அனைத்தும் பிராதான மண்டபத்தில் உள்ள விக்ரகங்களை பிரதிபலிக்கும் விதமாக சரியான இடத்தில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இந்தக் கோயில் கண்ணாடி கோயில் என்று அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications