புலியார்மலா ஜெயின் கோயில் அதன் மிகச் சிறந்த கட்டிடக் கலை பாணிக்காகவும், அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் தூண்களுக்காகவும் பிரபலமாக அறியப்படுகிறது. கல்பெட்டா நகரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், அனந்தநாத சுவாமி எனும் முக்கியமான ஜைன துறவி ஒருவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
புலியார்மலா ஜெயின் கோயில் நுண்ணிய கலை வேலைப்பாடுகளை உடைய வாயிற் கதவுகளை கொண்டுள்ளது. அதோடு வெளி நுழைவாயிலில் நீங்கள் கருங்கல் தூண் ஒன்றை பார்க்கலாம்.
இதுதவிர இந்தக் கோயிலில் அழகிய ஸ்தூபி ஒன்று உள்ளது. இது பாரம்பரிய திராவிடக் கலையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வண்ணமயமான மற்றும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் பிரமிட் வடிவத்தில் அமைந்திருக்கின்றன.
மேலும் இந்த இந்த ஸ்தூபியின் உச்சியில் ஜைன கடவுள் மஹாவீரரின் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புலியார்மலா ஜெயின் கோயிலின் பிராதன சந்நிதானத்தில் உள்ள சிறிய படிகளில் 20 பல்வேறு ஜைன கடவுளர்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications