கொண்டேஷ்வர் ஆலயம் முழுக்க முழுக்க பாறைகளைக் கொண்டு 400 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். இந்தக் கோயிலை சுற்றி அடர்ந்த வனங்களும், இயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும் எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
இருந்தாலும் இந்த நீர்வீழ்ச்சி அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. குறிப்பாக மழைக் காலங்களில் கோயிலின் தரை வழுக்குகிற நிலையில் இருக்குமென்பதால் பயணிகள் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
இங்கு மகாசிவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த சமயங்களில் இந்தக் கோயிலை சுற்றியுள்ள சிறிய ஆலயங்களிலும் கூட்டம் அலைமோதும்.



Click it and Unblock the Notifications