காங்க்ரா பகுதியில் உள்ள சட்லெஜ் பள்ளத்தாக்கில் இந்த பெஹ்னா மஹாதேவ் கோயில் அமைந்துள்ளது. சட்லெஜ் பள்ளத்தாக்கில் உள்ள பெரிய கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக்கோயில் இதன் மிகப்பெரிய கோபுரக்கூரைக்காக புகழ் பெற்றுள்ளது.
கூடாரம் போன்று இழுத்து நிறுத்திய கற்கூரை அமைப்புடன் கிழக்காசிய கோயில்கள் போன்ற தோற்றத்துடன் இந்த கோயில் காட்சியளிக்கிறது. இந்த கோயிலின் பிரகாரமும் மற்றும் மண்டப அமைப்பும் எல்லா பக்கங்களிலும் திறந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு பலகணி அமைப்புகளும் இந்த கோயிலில் காணப்படுகின்றன. வெளிநீண்ட நான்முனை கூரை அமைப்பு, அலங்கார வடிப்புகள் கொண்ட தூண்கள் மற்றும் கலசத்துடன் காணப்படும் குடைபோன்ற உச்சிக்கூரை ஆகிய கட்டுமான அம்சங்களை கோயிலின் பலகணி அமைப்பு கொண்டுள்ளது.
மேலும் கோயிலின் ஜன்னல்களில் மிருக உருவங்கள் மற்றும் தோரணப்பூ அலங்காரங்களின் புடைப்புச்சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன. ஒருவகையில் கேரள கோயில் போன்றும் இக்கோயில் காட்சியளிப்பது இதன் மற்றொரு சுவாரசிய அம்சமாகும்.



Click it and Unblock the Notifications