இண்டர்நேஷனல் ஹிமாலயன் ஃபெஸ்டிவல் எனும் இந்த திருவிழா காங்க்ரா மாவட்டத்தில் உள்ள மெக்லியாட் கஞ்ச் பகுதியில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் பிரசித்தமான திருவிழாவாகும்.
ஹிமாசல்பிரதேச சுற்றுலாத்துறை மற்றும் திபெத்திய உள்நாட்டு நிர்வாகத்துறை ஆகியவற்றின் ஆதரவுடன் இந்தோ-திபெத்திய ஃபிரெண்ட்ஷிப் சொசைட்டி எனும் அமைப்பினால் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. 1985ம் ஆண்டில் தலாய் லாமாவிற்கு உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை கொண்டாடும் விதமாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
திபெத்தியர்களால் முக்கியமான திருவிழாவாக கருதப்படும் இது தலாய் லாமாவின் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள சமாதான செயல்பாடுகளை அடையாளப்படுத்தும் விதமாக நடத்தப்படுகிறது.
மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படும் இந்த இண்டர்நேஷனல் ஹிமாலயன் ஃபெஸ்டிவல் திருவிழாவானது ஒரே எல்லையான இமயமலையை பகிர்ந்துகொண்டு வாழும் ஹிமாசலப்பிரதேச மக்கள் மற்றும் திபெத்திய மக்களை ஒற்றுமைப்படுத்தும் கலாச்சார அம்சமாகவும் விளங்கிவருகிறது.
திபெத்திய நிகழ்த்துகலை மையம் நடத்தும் பலவகையான கலை நிகச்சிகள், உள்ளூர் மக்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்கு பாரம்பரிய நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்வையாளர்கள் இந்த திருவிழாக்காலத்தில் கண்டு ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications