Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காங்க்ரா » ஈர்க்கும் இடங்கள் » மெக்லியோட்கஞ்ச்

மெக்லியோட்கஞ்ச், காங்க்ரா

38

இவ்விடம் காங்க்ராவிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1770 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது தலாய் லாமாவின் உறைவிடமாகவும் உள்ளது. இவ்விடம் போரின் போது திபெத்திய அரசின் தலைநகராக முப்பது வருடங்களாக இருந்துள்ளது.

இங்கு பிரமிக்கத்தக்க அழகான மடாலயம் ஒன்று உள்ளது. அங்கு புத்தர், பத்மசாம்பவர் மற்றும் அவலோகிதேஸ்வரரின் மிக பிரம்மாண்டமான உருவங்கள் உள்ளன. நம்கியால் மடாலயம், கோம்பா திப் த்சே-சோக் லிங்க் என்ற சிறய மடாலயம் ஒன்று மற்றும் த்பெத்திய கலையியற்றும் நிலையம் போன்றவை மெக்லியோட்கஞ்சில் உள்ள புத்த மற்றும் திபெத்திய தொடர்புடைய பிற இடங்களாகும்.

இவை தவிர திபெத்தியரின் உழைப்பு மற்றும் அவற்றை பற்றிய ஆவணங்கள் கொண்ட நூலகம், கஞ்சன் க்யுஷாங், மணி லக்ஹங் ஸ்தூபி, நேசுங் மடாலயம் மற்றும் நார்புலிங்க இன்ஸ்டிடூட் போன்ற இடங்களை இங்கு காணலாம். பாக்சு அருவி, பாக்சுனாக் கோயில் மற்றும் ஏஞ்ஜெலிகன் தேவாலயம் போன்றவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களாக உள்ளன.

மெக்லியோட்கஞ்ச், திபெத்தியரின் பழங்கால கைவினைப் பொருட்களுக்கும், துணி வகைகளுக்கும் பெயர் போனது. ஏப்ரல் மாதத்தில் பத்து நாட்கள் திரையரங்குகளில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றன.

இவ்விடம் முழுவதும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இக்காடுகளில், ஓக், பைன், தேவதாரு மற்றும் ரோடோடென்ரான் வகை செடியினங்களைக் காணலாம். பனியை தொப்பி போல் ஏற்றிருக்கும் குன்றுகளுடைய மெக்லியோட்கஞ்ச், வருடம் முழுவதும் குளிர்ச்சியான, இதமான வெட்ப நிலையை கொண்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Jun,Mon
Return On
02 Jun,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Jun,Mon
Check Out
02 Jun,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Jun,Mon
Return On
02 Jun,Tue