ஜஜேஸ்மோவ் என்று பத்தொன்பதாவது நூற்றாண்டில் அழைக்கப்பட்டு வந்த ஜஜ்மாவ் நகரம், கான்பூரின் புறநகர் பகுதிகளில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. தற்போது, தொழில் மையமாக விளங்கும் இந்நகரம், இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பகுதியிலேயே மக்கள் வசித்து வந்த, மிகவும் பழமையான இடமாகும்.
இங்கு நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட கருவிகள், தொல்பொருட்கள் மற்றும் மட்பாண்டங்கள் இந்த நகரத்தின் வரலாற்றை கி.மு.1300 முதல் 1200-க்கு இடைப்பட்ட காலங்களுக்கு எடுத்துச் செல்கின்றன.
இந்திய தொல்பொருள் நிறுவனம், சந்திரகுப்த மௌரியர் காலத்தைச் சேர்ந்த தந்தத்தாலான முத்திரையைக் இங்கு கண்டுபிடித்துள்ளது. இந்த பொருட்கள் தற்போது கான்பூர் சங்கராஹாலயாவில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நகரத்தில் 'ஜின்னடன் கி மசூதி' என்ற பழமையான மசூதி ஒன்றும் உள்ளது. ஒரு மலையின் மீது அமைக்கப்பட்டுள்ள இந்த மசூதி, அதன் வெள்ளை நிறம் காரணமாக தாஜ் மஹாலின் கட்டிடக்கலையைப் போன்று இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த மசூதியில் இருந்து கீழிறங்கி வந்தால், சற்று தொலைவிலேயே ஹஸ்ரத் மக்தூம் ஷா ஆலா என்ற சூஃபி ஞானியின் கல்லறையைக் காணலாம். இந்த புனிதத்தலம் 1358-ம் ஆண்டு பெரோஸ் ஷா துக்ளக்கினால் கட்டப்பட்டது.



Click it and Unblock the Notifications