Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கான்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ இராதாகிருஷ்ணர் கோவில்

ஸ்ரீ இராதாகிருஷ்ணர் கோவில், கான்பூர்

31

சிங்கானியா குடும்பத்தாரின் ஜே.கே.டிரஸ்ட் மூலம் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட ஸ்ரீ இராதாகிருஷ்ணர் கோவில், ஜே.கே. கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கோவில் பழைய மற்றும் புதிய கட்டிடக்கலைகளின் இணைவாக உள்ளது. போதுமான காற்றோட்ட வசதிக்காக இந்த கோவிலின் மண்டபங்கள் மிகவும் உயரமாக கட்டப்பட்டுள்ளன.

புகழ் பெற்ற இந்து கடவுள்கள் ஐவருக்கான வழிபாட்டுத் தலங்களை கொண்டுள்ள இந்த கோவிலில், கோவிலின் பெயராக இருக்கும் இராதா மற்றும் கிருஷ்ணருக்காக ஒரு  கோவிலும், அனுமான், லட்சுமி நாராயணர், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் நர்மதேஸ்வரர் ஆகியவர்களுக்காக பிற நான்கு கோவில்களும் கட்டப் பட்டுள்ளன.

அழகாக செதுக்கப்பட்டுள்ள இந்த சிலைகள், நல்ல உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ள மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ இராதாகிருஷ்ணர் கோவிலுக்கு அருகில் பிரமிக்க வைக்கும் ஒரு பூங்கா மற்றும் ஏரி ஆகியவை உள்ளன. இரவு வேளைகளில், ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் இந்த கோவிலின் பிம்பம், ஏரியில் பட்டு பிரதிபலிக்கும் காட்சி உங்களை மெய்மறக்கச் செய்திடும் என்பதில் சந்தேகமில்லை! இந்த கோவிலிற்கு செல்வதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed