Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்கில் » ஈர்க்கும் இடங்கள் » ஷானி மடாலயம்

ஷானி மடாலயம், கார்கில்

32

ஷானி  கிராமத்தின் அருகே அமைந்துள்ள `டுர்டோட் காய்ட்' (Turtot Gyat), எனப்படும் ஷானி மடாலயம்,  மிகவும் பிரபலமான புத்த மத மையங்களில் ஒன்றாகும்.  இந்த கோம்பா அல்லது மடாலயம் உலகின் 8 புனித மடங்களிள் ஒன்று.

பழைய காலங்களில், புத்த மத அறிவு மேதைகளான, ` மார்பா', `நரோபா', மற்றும் `பத்மசம்பவா' போன்றோர் இந்த மடத்திற்கு  விஜயம் செய்ததாக  கூறப்படுகிறது.  குஷான் அரசர், கனிஷ்ரால்   1 ம் நூற்றாண்டில்  கட்டப்பட்ட,  இந்த மடாலயம் திபெத்திய புத்த பள்ளியான டுருக்பா கர்க்யுவிற்கு (Drukpa Kargyu)   சொந்தமானது.  இந்த  மடாலயம், ` லடாக்'  மற்றும்` ஷான்ஸ்கர்' பகுதியில் காணப்படும்  பழமையான  மடாலயங்களில் ஒன்று.

குஷான் அரசர் கனிஷ்காவினால் 1 ஆம் நூற்றாண்டு காலத்தில்  தோற்றுவிக்கபெற்ற  108 ஸ்தூபங்களிள்  ஷானி மடாலயமும் ஒன்று. இம்மடாலயத்தின் பின்புறத்தில் 20 அடி உயரம் உள்ள `கனிகா ஸ்தூபம்' காணப்படுகிறது.

இம்மடாலயத்தின் மதிற்சுவர் செவ்வக வடிவில் உள்ளது. இம்மடாலயத்தின்  சட்டசபை மண்டபத்தை சாம்பா, சென்ரென் , மற்றும் பத்மசம்பவரின்  படங்கள் அலங்கரிக்கின்றன.

பல்வேறு திபெத்திய புத்த மத பள்ளிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காங்யுர் (Kangyur) புனித தொகுதிகள், திபெத்திய புத்த நியதிகளின் தொகுப்பாகும்.  இப்புனித நூற்கள் மடத்தில் உள்ளே உள்ள சிறிய அறையில் பாதுகாப்பாக  வைக்கப்பட்டுள்ளது.  மடத்தில் ஒரு சிறிய நரொப்பா (Naropa) கோவில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்,  ஒரு முகமூடி நடனம்  இம்மடத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றது. ஷானி நாரோ-நஷ்ஜல் மற்றும் கிரேட்  ஜெபம்  ஆகியன மற்ற பிரபல விழாக்கள் ஆகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed