கோட்லிகாட் என்றும் அழைக்கப்படும் இந்த பேத் கோட்டை கர்ஜத் நகரத்துக்கு மிக அருகில் உள்ள பேத் எனும் சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பேத் மலைப்பகுதி மாத்தேரான் மலைகளை பின்னணியில் கொண்டுள்ளதால் அற்புதமான இயற்கைக்காட்சிகளுடன் காட்சியளிக்கின்றது.
இங்கிருந்து கொங்கணப்பிரதேசத்தின் இயற்கை எழிலை நன்றாக ரசிக்க முடிகிறது.இந்த கோட்டைக்கு அருகிலேயே உள்ள ஒரு சிறு குகையில் பைரோபா கடவுளின் விக்கிரகம் உள்ளது. பேத் கோட்டை தற்சமயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும், இங்குள்ள நீர்த்தொட்டிகள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன.
இந்த கோட்டை மராத்தா ஆட்சியாளர்களால் எதிரிகளிடமிருந்து தங்கள் ராஜ்ஜியத்தை காப்பாற்றும் நோக்கில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.இந்த கோட்டைக்கு அருகாமையில் நேதர்சோலே அணை மற்றும் பன்சாத் காட்டுயிர் சரணாலயம் போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்களும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications