Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ணால் » ஈர்க்கும் இடங்கள் » கோக்ரிபூர்

கோக்ரிபூர், கர்ணால்

27

கர்ணால் மாவட்டத்திலுள்ள நிசிங் வட்டத்தில் இந்த கோக்ரிபூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. கர்ணால் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் பஜிடா ஜடான் ரயில் நிலையத்திற்கு அருகில் இக்கிராமம் உள்ளது. பூ அலி கலந்தர் எனும் சூஃபி ஞானியின் தர்க்கா சன்னதிக்காக இந்த கிராமம் பிரசித்தி பெற்றுள்ளது.

கலந்தர் எனும் சொல் தனக்கென எதையும் சொத்தாக வைத்திருக்காத துறவியை குறிப்பிடுகிறது. இது போன்ற சந்நியாசிகள் தர்வேஷ் என்றும் உருது மொழியில் அழைக்கப்படுகின்றனர்.

கடவுள் அம்சங்கள் கொண்ட இந்த ‘கலந்தர்கள்’ என்பவர்கள் பிறர் விருப்பத்தோடு அளிப்பதை மட்டுமே ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் ஆவர். இருப்பினும் இதன் பொருள் பிச்சைக்காரர்கள் என்பதல்ல.

ஆன்மீக அம்சங்களில் மூழ்கி திளைத்திருக்கும் இவர்கள் தங்கள் சுய தோற்றம் மற்றும் தேவைகள் போன்றவற்றின் மீது நாட்டம் இல்லாதவர்கள் ஆவர்

இவர்கள் கடவுள் மீது அதீத அன்பு கொண்டவர்களாக இருப்பதால் இறைவன் இவர்களை ஒருபோதும் பட்டினியில் வாட விடுவதில்லை. எனவே ஒரு கலந்தர் என்பவர் ‘பாத்ஷா’ – அதாவது பேரரசர் - என்றும் அழைக்கப்படுகிறார். தன்னைப்பற்றிய கவலையற்று தன்னிடம் இருப்பவற்றையெல்லாம் இல்லாதவர்க்கு வழங்கக்கூடியவரே இந்த கலந்தர்.

இப்படி தெய்வீக அம்சங்கள் வாய்க்கப்பெற்ற கலந்தர்’களுக்கு எளிய மக்களின் துன்பங்களை போக்கக்கூடிய சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. நம்ப முடியாத அதிசயங்களை இவர்களால் நிகழ்த்த முடியும். ஆனால் தங்கள் சுயநலத்துக்காக எதையும் செய்துகொள்வதில்லை.

இத்தகைய சக்திகளோடு வாழ்ந்த ஒரு கலந்தர் சூஃபி ஞானியின் கல்லறை கோக்ரிபூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் வழிபடவும், தங்கள் தேவைகளுக்காக வேண்டிக்கொள்ளவும் ஏராளமான பக்த்ர்கள் விஜயம் செய்கின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed