ஆமை வடிவத்தில் காணப்படும் இந்த குரும்காட் தீவு கரையிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு பொருத்தமான இயற்கை அமைப்பு இந்த தீவில் உள்ளது.
இந்த தீவை சுற்றிப்பார்க்கும்போது மற்ற கட்டமைப்புகளைக்காட்டிலும் வித்தியாசமாக தோன்றும் ஒரு கலங்கரை விளக்கத்தையும் இங்கு பார்க்க முடிகிறது. அக்டோபர் மற்றும் மே மாதங்கள் இந்த தீவுக்கு சுற்றுலா வருவதற்கு ஏற்றவை.குரும்காட் கடற்கரை மற்றும் நரசிம்மர் கோயில் இரண்டும் இந்த குரும்காட் தீவில் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். இங்குள்ள கடற்கரைப்பகுதியில் மீன் பிடித்தல், ஆழ்கடல் நீச்சல் (ஸ்நார்கெல்லிங்), கடல் உயிரினங்களை ரசித்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
இங்கு டால்பின் வேடிக்கை, பீச் வாலிபால், புதையல் வேட்டை போன்ற சுவாரசியமான பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. இங்குள்ள நரசிம்மர் கோயில் ஒரு பிரசித்த ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக அறியப்பட்டுள்ளது. வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் இந்த கோயிலில் நடைபெறும் உற்சவத்திற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications