கார்வார் பகுதியில் உள்ள ஆன்மீக யாத்ரீக தலங்களில் முக்கியமான ஒன்றாக இந்த நரசிம்மர் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. இது கார்வாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் குரும்குட் தீவில் அமைந்துள்ளது.
ஹிந்து புராணப்படி விஷ்ணு பஹவானின் அவதாரமான நரசிம்மருக்காக இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குரும்காட் தீவில் உள்ள மலை உச்சியில் இந்த கோயில் உள்ளதால் மலையை ஏறிச்சென்றுதான் பக்தர்கள் இந்த கோயிலை தரிசிக்க முடியும்.
ஜனவரி மாதத்தில் இந்த கோயிலில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் யாத்ரா திருவிழாவில் கலந்துகொள்ள இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் திரளாக வருகின்றனர். சதாஷிவ்காட் படகுத்துறையிலிருந்து மோட்டார் படகு மூலம் பயணிகள் இந்த தீவிற்கு செல்லலாம்.



Click it and Unblock the Notifications