கத்துவா மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக பானி என்னும் இந்த அழகிய சிறிய பள்ளத்தாக்கு கருதப்படுகிறது. பனியால் சூழப்பட்டிருப்பதால் இப்பள்ளத்தாக்கு 'கத்துவாவின் குட்டி காஷ்மீர்' என்றும் அழைக்கப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 4200அடி உயரத்தில் அமைந்திருக்கிறது பானி பள்ளத்தாக்கு. இங்கு செல்லும் பயணிகள் வழியெங்கும் ஏராளமான நீர்வீழ்ச்சிகளையும், புல்வெளிகளையும், அடர்ந்த காடுகளையும், சத்தம் எழுப்பி ஓடும் ஓடைகளையும் காணலாம். சம்பா, பதெர்வா ஊர்களில் இருந்து வரும் மலையேற்ற வீரர்கள் இந்த பகுதியில் தங்கள் கூடாரத்தை அமைத்து தங்குகிறார்கள்.



Click it and Unblock the Notifications