காந்தி ஆசிரமம் என அழைக்கப்படும், அனஸக்தி ஆசிரமம், மகாத்மா காந்தியின் நினைவாக கட்டப்பட்டது. 1929 ல் 'தேசத்தந்தை', மகாத்மா காந்தியடிகள், இந்த ஆசிரமத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
அவ்வருகையின் போது, `அனஸக்தி என்பதற்கு, பற்றற்ற யோகா எனப் பொருள்', என்று குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள், புத்தகங்கள் ஆகியன இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆசிரமம், தற்போது, ஒரு உறைவிட கல்வி மற்றும், ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு உள்ள மாணவர்களுக்கு, உறைவிடம் மற்றும் சமையல் வசதிகள் வழங்கப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு நாள், காலை மற்றும் மாலை வேளைகளில் பிரார்த்தனை நடைபெறுகிறது.



Click it and Unblock the Notifications