ஆன்மீக நகரமாகிய பேகேஸ்வர், `சரயு' மற்றும் `கோமதி' நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்து மத புராணங்களின் படி, இங்கு சிவன் புலி வடிவம் கொண்டு உலவியதாக நம்பப்படுகிறது.
இந்த நகரத்தின் முக்கியத்துவத்தை, இந்து மத புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் விரிவாக குறிப்பிடுகின்றன. பேகேஸ்வர், கௌஸனியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நகரம் இரு புறங்களிலும் `பீலெஷ்வர்', மற்றும் `நீலெஷ்வர்' என்கிற மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு `உத்ரயானி' எனும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.



Click it and Unblock the Notifications