பெயருக்கேற்றவாறு இந்த துர்க்கா தேவி கோயில் துர்க்கையம்மனுக்காக எழுப்பப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான கோயிலாகும். துர்க்கா தேவி பெண் சக்தியின் ரூபம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பல கரங்களில் ஆயுதங்களை ஏந்தி சிங்கத்தின் மீது அமர்ந்த கோலத்தில் இந்த துர்க்கையம்மன உக்கிரமாக தோற்றமளிக்கின்றார். மகிஷாசுரன் எனும் காளை அரக்கனை துர்க்கா தேவி வதம் செய்ததாக ஐதீகக்கதைகள் கூறுகின்றன. பெண் சக்தியின் அதிஉச்ச அவதாரமாக இந்த துர்க்கா தேவி வணங்கப்படுகின்றார்.
கௌசாம்பி மாவட்டத்தில் மஹாஜன்பூர் நகரத்திற்கு தென்மேற்கே 1 கி.மீ தூரத்தில் இந்த துர்க்கா தேவி கோயில் அமைந்துள்ளது. கி.மு 4ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இக்கோயிலின் கருவறையில் துர்க்கா தேவியின் கருங்கல் சிலை மட்டுமல்லாது சிவபெருமானின் சிலையும் காணப்படுகிறது. வருடமுழுதும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.
நவராத்திரி திருநாளின்போது வண்ணமயமாக காட்சியளிக்கும் இக்கோயிலுக்கு துர்க்கையின் ஆசி பெறுவதற்காக பக்தர்கள் பெரும் திரளாக வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications