Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கௌசாம்பி » ஈர்க்கும் இடங்கள் » ஷீத்லா கோயில்

ஷீத்லா கோயில், கௌசாம்பி

11

கங்கை நதிக்கரையில் அலாஹாபாத் நகரத்திலிருந்து மேற்கே  69 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஷீத்லா கோயில் முக்கியமான ஷக்தி பீடக்கோயில்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்தியாவில் 51 ஷக்தி பீடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை யாவுமே பார்வதி தேவியின் அவதாரங்களுக்கு எழுப்பப்பட்டிருக்கின்றன.

இந்த கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை உடையதாக கருதப்படுகிறது. இங்குள்ள கருவறையில் ஷீத்லா தேவி கர்தபம் எனும் கழுதையின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

இந்த கோயில் அமைந்திருக்கும் கரா எனும் ஊர் ஒரு புராதனமான நகராகும். இது அக்காலத்தில் பல ஹிந்து ராஜ வம்சங்கள் ஆண்ட நகரமாக சொல்லப்படுகிறது.

கடைசி கனோஜ் வம்ச மன்னரான ராஜா ஜய் சந்த் என்பவர் கட்டிய கோட்டையின் இடிபாடுகளை இந்த ஷீத்லா கோயிலுக்கு அருகிலேயே காணலாம். ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த கோட்டை ஸ்தலத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

கிருஷ்ணபட்சத்தின் எட்டாவது அஷ்டமி நாளில் இந்த கோயில் தெய்வத்தை வணங்கினால் எல்லா தீமைகளும் தீரும் என்று ஷீத்லா தெய்வத்தின் பக்தர்கள் நம்புகின்றனர்.

ஹிந்துக்கள் மட்டுமல்லாது எல்லா நம்பிக்கைகளைச் சேர்ந்தவர்களையும் இந்த ஷீத்லா கோயில் ஈர்க்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
05 Apr,Sun
Return On
06 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
05 Apr,Sun
Check Out
06 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
05 Apr,Sun
Return On
06 Apr,Mon