அஸ்ஸாம் மாநிலத்தின் லக்ஷிம்பூர் மாவட்டத்தின் நாராயண்பூரின் தோல்பூருக்கு அருகில் உள்ள கதானி என்ற கிராமத்தில் படோகுச்சி தான் என்ற சிறிய கோவில் அமைந்துள்ளது.
கேசப்சரண் படோகுச்சியா ஆடா என்பவரால் கட்டப்பட்டதால் இந்த கோவிலுக்கு படோகுச்சியா தான் என்று பெயரிடப்பட்டது. பழமையான இலக்கியமான கஹ்டாகுருசரிதத்தில் இவர் கி.பி.1605-ல் பிறந்து கி.பி.1665-ல் இறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.
கடவுளின் இறையருள் பெறுவதற்காக அஸ்ஸாம் மாநிலம் முழுவதிலிருந்துமே சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.
உலகப் புகழ் பெற்ற காஸிரங்கா சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் நாடு முழுவதுமிருந்து வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளையும் கவரும் கோவிலாக இது உள்ளது.
தேயிலை தோட்டங்கள் மற்றும் கானகங்களுக்கிடையில் அமைந்துள்ள இந்த கோவிலிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அஸ்ஸாம் மாநிலத்தின் உண்மையான அழகை ரசித்திட உதவும் இடமாகும். இந்த கோவிலின் கட்டிடக்கலை, அஹோம் வம்சத்தவர்களின் கலை மற்றும் கைவினைத்திறம் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.



Click it and Unblock the Notifications