அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டத்திலுள்ள போகாகாட் பகுதியிலிருந்து 13 கிமீ தொலைவில் காகோக்சாங் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இயற்கையான சொர்க்கத்தைப் போன்று இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
இம்மாவட்டத்தின் காப்பி மற்றும் இரப்பர் தோட்டங்களினூடாக விழுந்து கொண்டிருக்கும் இந்நீர்வீழ்ச்சியின் காட்சி உங்களை திணறடிப்பதாக இருக்கும்.
பிரபலமான சுற்றுலாத் தலமாக இருக்கும் இந்நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருவார்கள். இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் இருக்கும் இடங்கள் இன்ப சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடங்களாகும்.
காகோக்சாங் நீர்வீழ்ச்சியிலிருந்து நுமாலிகாரின் சிதைவுகளையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும். இந்த பழமையான சிதைவுகள் மிகவும் முக்கியமான தொல்பொருள் சிதைவுகளாகும்.
காஸிரங்கா சுற்றுலாப் பயணத்தின் போது, நுமாலிகாரின் தியோபர்பத் சிதைவுகளை காண செல்லும் சுற்றுலாப் பயணிகள் அப்படியே காகோக்சாங் நீர்வீழ்ச்சியையும் காண திட்டமிடலாம். இந்நீர்வீழ்ச்சி இருக்கும் போகாகாட் பகுதி காஸிரங்கா தேசிய பூங்காவிலிருந்து 23 கிமீ தொலைவிலேயே உள்ளது.
மழைக்காலத்தின் போது கிடைக்கப்பெற்ற அபரிமிதமான மழைப்பொழிவினால், தண்ணீர் நிரம்பி ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருக்கும் காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு பின் மழைக்கால நாட்களில் இங்கு வருவது சிறந்த அனுபவத்தைத் தரும்.



Click it and Unblock the Notifications