Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காஸிரங்கா » ஈர்க்கும் இடங்கள் » தேயிலை தோட்டங்கள்

தேயிலை தோட்டங்கள், காஸிரங்கா

24

அஸ்ஸாமின் பெருமைக்குரிய பகுதிகளாக அதன் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அஸ்ஸாமின் தேயிலை அதன் மணம் மற்றும் நிறத்திற்காக புகழ் பெற்றதாகும். காஸிரங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள தேயிலை தோட்டங்களுக்கும் சென்று பார்த்து வரலாம்.

இந்த மலைப்பாங்கான நிலத்தில் உருண்டு திரண்டு சிறு புதர்களைப் போல குட்டையாக நின்று கொண்டிருக்கும் தேயிலை தோட்டங்கள் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் அவர்களுடைய வாழ்நாளில் கண்டிப்பாக காண வேண்டிய காட்சியாகும்.

இங்கிருக்கும் பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் சுற்றுலாப் பயணிகளை கனிவுடன் வரவேற்கும் இடங்களாகும். மெதோனி, ஹத்குளி, டிபாலு, போர்சாபோரி மற்றும் பெஹோரா ஆகியவை காஸிரங்காவிற்கு அருகிலுள்ள சில முதன்மையான தேயிலைத் தோட்டங்களாகும்.

பெரும்பாலும் பகல் வேளைகளில் இந்த தேயிலை தோட்டங்களை பார்வையிட முடியும் என்றாலும், சில தோட்டங்களில் இரவிலும் தங்கியிருக்க முடியும்.

இந்த தேசிய பூங்காவை சில நாட்களுக்கு சுற்றிப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள், இரவு வேளைகளில் தேயிலை தோட்டங்களில் தங்குவது சிறந்த அனுபவமாக இருக்கும். பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் இந்த பூங்காவிற்கு அருகிலேயே அமைந்துள்ளதால் இவற்றிற்கு செல்வது கடினமான காரியமாக இராது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue