கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் கல்ஹட்டி நீர்வீழ்ச்சிக்கும் செல்லலாம். இது காலஹஸ்தி என்றும் கல்லதிகிரி அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அகஸ்திய முனிவர் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த அருவிக்கு அருகில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட வீரபத்திர ஆலயம் என்னும் தொன்மையான கோயில் ஒன்று உள்ளது. இதன் வாயிலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மூன்று யானை சிற்பங்கள் இருக்கின்றன.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கும் திருவிழாவில் மத வேறுபாடின்றி ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர்.



Click it and Unblock the Notifications