வற்றாத நீர்வீழ்ச்சியான சங்ககரா கியோஞ்சரில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ளது. உள்ளூர் மக்கள் மிகவும் விரும்பும் இடமாக திகழும் இந்த சிறிய நீர்வீழ்ச்சியின் அழகு வியக்கவைப்பதாகும்.
ஆங்கில 'V' வடிவில் உள்ள இதன் தோற்றமும், அதைச் சுற்றியுள்ள எழிலார்ந்த இடமும் பயணிகளின் விருப்ப இடமாக இதை ஆக்கியுள்ளது. வருடந்தோறும் குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள். கூடாரம் அமைக்கவும், மலையேற்றம் செய்யவும் இது தகுந்த இடமாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications