கண்டாலா மலைவாசஸ்தலத்தில் உள்ள இந்த புஷி அணைப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் விரும்பக்கூடிய சிற்றுலாப்பகுதியாகும். ஒரு மாலை நேரத்தை ஏகாந்தமாக கழிப்பதற்கு உகந்த அழகான இயற்கைப்பிரதேசங்கள் மற்றும் தாவரக்காடுகளை பின்னணியில் கொண்டு இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது. இதன் அமைதியான சூழலும் ஸ்படிகம் போன்ற நீரும் பயணிகளை ஒருவிதமான சாந்தி நிலைக்கு உட்படுத்துகின்றன.
இது தவிர இன்னும் பல ஏரிகளும் கண்டாலா மலைவாசஸ்தலத்தில் அமைந்துள்ளன. துகாவ்லி ஏரி, லோனாவலா ஏரி மற்றும் வலவண் அணை போன்ற நீர்த்தேக்கங்களும் சுற்றுலாப்பயணிகளுக்கு உகந்த இயற்கைச்சூழலை கொண்டுள்ளன.



Click it and Unblock the Notifications