செயற்கை ஏரியான கொடைக்கானல் ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். 1863-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த ஏரி மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. தொலைவில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த ஏரி. ஏரியை ஒட்டியே சில படகு துறைகளும் காணப்படுகின்றன. அவை படகு சவாரி செய்ய துடுப்பு படகுகள் மற்றும் மிதிக்கட்டை படுகுகளும் வாடகைக்கு விடுகின்றன.
இது போக குதிரை சவாரி மற்றும் மிதிவண்டி பயணம் செய்ய குதிரை மற்றும் மிதிவண்டிகள் வாடகைக்கு கிடைக்கும். ஏரியின் கரையை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு நடை பாதை அமைக்கப்பட்டிருப்பதால் இங்கு நடை பயணமும் மேற்கொள்ளலாம்.
இது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. ஊருக்குள் ஓய்வெடுக்க இந்த ஏரி ஒரு சிறந்த இடம்.



Click it and Unblock the Notifications