குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. 12 ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் அறிய வகை பூவான குறிஞ்சி பூக்கள் இந்த இடத்தில் பூத்துக் குலுங்குகின்றன.
எனவே இந்த இடம் இதற்கு புகழ் பெற்றது. இக்கோயில் ஸ்ரீ குறிஞ்சி ஈஸ்வரன் என்றழைக்கப்படும் முருக கடவுளுக்காக அமைக்கப்பட்ட கோயில். 1936-ஆம் வருடம் கட்டப்பட்ட கோயில் இது.
ஹிந்து மதத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு ஐரோப்பிய பெண்ணால் கட்டப்பட்ட கோயில் இது. அப்பெண் ஒரு ஹிந்துவை திருமணம் செய்து திருமதி ராமநாதன் என்று அழைக்கப்பட்டார். இக்கோயில் தற்போது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது.



Click it and Unblock the Notifications