குழந்தைகள் மத்தியில் பிரசித்தி பெற்ற இந்த ரங்கலா சௌபாத்தி மாலை நேரத்தை குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் கழிக்க சிறந்த இடமாகும். எழில் மிகுந்த பூங்கா ஒன்று இங்கு உல்லாச பொழுது போக்கிற்காக உள்ளது.
ரங்கலா ஏரியின் அருகில் அமைந்துள்ள இந்த இடம் இங்குள்ள ரணபைரவர் என்ற கடவுளின் பெயராலேயே இப்படி அழைக்கப்படுகிறது. இதன் அருகில் ஷாலின் அரண்மனை என்ற இடமும் உள்ளது. இதுவும் அவசியம் கண்டு மகிழ வேண்டிய ஒன்றாகும்.கோலாப்பூர் பகுதியிலுள்ல ஏனைய வரலாற்று சின்னங்களைப் போலவே இந்த ஏரியும் மஹாராஜா சத்ரபதி ஷாகுவால் செயற்கையாய் உருவாக்கப்பட்டதாகும். ரங்கலா சௌபாத்திக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் படகுச்சவாரி மற்றும் குதிரை சவாரி போன்ற பொழுது போக்கு அம்சங்களை அனுபவித்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications