இந்தியன் மியூசியம், கொல்கத்தா

உலகத்திலுள்ள பழமையான அருங்காட்சியகங்களின் ஒன்றாகவும் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகமாகவும் இந்த இந்தியன் மியூசியம் புகழ் பெற்று விளங்குகிறது.

வெவ்வேறு வரலாற்று யுகங்களை சேர்ந்த அரும்பொருட்கள் முதல் மானுடவியல் ஆதாரங்கள் வரை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை சேர்ந்த பொருட்கள் இங்கு பிரதானமாக இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை தவிர திபெத்திய, பர்மிய மற்றும் முகாலாயர் கலாச்சாரத்துக்குரிய அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

Please Wait while comments are loading...