Search
  • Follow NativePlanet
Share

கொல்லிமலை - இயற்கையின் பொக்கிஷம்!

15

கொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இவ்வழகிய மலைத்தொடரை காணவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.

ராசிபுரத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு கொல்லிமலையில் இருக்கும் அறப்பலீஷ்வரர் கோவிலில் இருந்து ரகசிய பாதை இருப்பதாக சொல்லப்படுகிறது. இக்கோவிலால் கொல்லிமலை யாத்ரீக ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.

வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் இக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள். எட்டுக்கை அம்மன் என்றும் கொல்லிப்பாவை என்றும் அழைக்கப்படும் பெண்கடவுளின் பெயரால் இம்மலை கொல்லிமலை என்று வழங்கப்படுகிறது. ஆதிகாலம் தொட்டே இம்மலை கொள்ளிப்பாவை அம்மனின் அருளால் பாதுகாக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

கொல்லிமலையைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

இயற்கை சூழலில் நெடுந்தூரம் நடப்பதில் ஆர்வமுள்ளோர், மலையேற்றத்தில் ஆர்வமுள்ளோர் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் கொல்லிமலை வருடம் முழுவதும் நிரம்பி வழிகிறது. இங்கு காணப்படும் ஆகாய கங்கை என்ற அருவி மிகவும் புகழ்பெற்றது.

கலாச்சார நிகழ்ச்சிகள் நிறைந்த 'ஓரி திருவிழா' நிறைய மக்களை இப்பகுதிக்கு வரவழைக்கிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் அரசால் மலை காட்சிக் கோணங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாசிலா அருவியும், சுவாமி பிரவானந்தா ஆசிரமமும் இங்கு அமைந்திருக்கும் மேலும் இரண்டு சுற்றுலா இடங்களாகும்.

கொல்லிமலைக்கு ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு. கொல்லிமலையில் கோடைகாலங்களிலும் ரம்மியமான தட்பவெட்ப நிலையே நிலவுகிறது. குளிர்காலங்களில் பனி மிக அதிகமாக இருப்பதால் குளிர் மற்றும் மழைக்காலங்களில் கொல்லிமலைக்கு பயணிப்பதை தவிர்ப்பது நல்லது.

கொல்லிமலை சிறப்பு

கொல்லிமலை வானிலை

சிறந்த காலநிலை கொல்லிமலை

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கொல்லிமலை

  • சாலை வழியாக
    கொல்லிமலைக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட பல முக்கியமான ஊர்களில் இருந்தும் கொல்லிமலைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்தில் செல்லலாம். கொல்லிமலையில் இருந்து 88 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து கொல்லிமலைக்கு கார் கட்டணமாக 1100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சேலம் ரயில் நிலையம் கொல்லிமலையில் இருந்து 90கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. திருச்சி நிலையமும் ஏறத்தாழ இதே தொலைவில் உள்ளது. சேலம் மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் இருந்து தனியார் கார் மூலம் கொல்லிமலை செல்ல கட்டணமாக 1200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொல்லிமலையில் இருந்து சுமார் 90 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் திருச்சி விமான நிலையமே கொல்லிமலைக்கு அருகாமையில் இருக்கும் விமான நிலையம் ஆகும். முக்கியமான பல நகரங்களில் இருந்து திருச்சிக்கு அடிக்கடி விமானசேவைகள் உண்டு. மேலும் திருச்சியில் இருந்து வாடகை கார் மூலம் கொல்லிமலை செல்ல சுமார் 1200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue