கோட்டா நகரத்திலுள்ள மிக முக்கியமான ஆன்மிக ஸ்தலங்களில் இந்த கன்சுவா கோயிலும் ஒன்று. சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தக்கோயில் நான்கு தலைகளுடன் காட்சியளிக்கும் சிவன் விக்கிரகத்துக்காக பிரசித்தி பெற்றுள்ளது.
இக்கோயிலில் உள்ள சிவனை வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். மேலும், கன்சுவா கோயில் ஸ்தலத்துக்கு அருகிலேயே பூத் சிங் பஃப்னா ஹவேலி, பித்ரியா குண்ட், ஆதர் ஷீலா மற்றும் டிராஃபிக பார்க் போன்ற இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களும் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications