கோட்டா பாரேஜ் எனப்படும் இந்த தடுப்பணை கட்டுமானம் நவீன பொறியியல் கட்டமைப்பு அம்சங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. இது கோட்டா நகருக்கு பலவிதங்களில் பயன் தரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
மேலும், இது ராஜஸ்தான் மற்றும் மத்யபிரதேச மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பெரிதும் பயன்படும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் நீர் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
1960ம் ஆண்டு தீட்டப்பட்ட சம்பல் பள்ளத்தாக்கு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட நான்காவது அணை இந்த கோட்டா பாரேஜ் ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 99 mm³ ஆகவும் நீர்ப்பிடிப்பு பகுதி 27, 332 ச.கி.மீ பரப்பை கொண்டதாகவும் உள்ளது.



Click it and Unblock the Notifications