கோட்டா நகரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த ராவ் மாதோ சிங் மியூசியம் பிரசித்தி பெற்றுள்ளது. இது கோட்டா நகரின் முதல் மன்னரான ராஜா மாதோ சிங் பெயரால் அழைக்கப்படுகிறது. இது முதலில் அரண்மனையாக இருந்து தற்சமயம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
இங்குள்ள அரும்பொருட்கள் யாவும் காலவரிசைப்படி காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பம்சமாகும். மேலும் அரும்பொருட்கள் நல்ல முறையிலும் பராமரித்து பாதுகாக்கப்பட்டிருப்பதால் இது ராஜஸ்தானிலுள்ள மிகச்சிறந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.
பயணிகள் இங்கு அழகிய ஓவியங்கள், புராதன நாணயங்கள், வெள்ளி பாத்திரங்கள், எழுத்துப்பிரதிகள், சிற்பங்கள், சின்னங்கள், சிலைகள், ஆயுதங்கள் மற்றும் சாந்துப்பூச்சு ஓவியங்கள் ஆகியவற்றைக்காணலாம்.
கோட்டா ஓவியக் கல்லூரியிலிருந்து பெறப்பட்டுள்ள குறு ஓவியங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை மற்று அரசு விடுமுறை நாட்களில் மூடப்படுகிறது.



Click it and Unblock the Notifications