Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிருஷ்ணகிரி » ஈர்க்கும் இடங்கள் » அரசு அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி

20

காந்தி சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களையும் கவரும் இடமாக உள்ளது. 1993-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் எண்ணற்ற கலைச் சின்னங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.

இந்த அரசு அருங்காட்சியகம் பாரம்பரியத்துடன் உறவையும், கலை மற்றும் கட்டிடக்கலைகள், கலாச்சாரம் மற்றும் தமிழக வரலாற்றையும் ஒருங்கே கொண்டிருக்கும் அமைவிடமாகும்.

இந்த அரசு அருங்காட்சியகம் பொழுதுபோக்கிற்கான இடமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த கல்விக்கூடமாகவும் விளங்குகிறது. ஆர்ப்பாட்டமான உலகமயமாக்கல் கொள்கையால் நாட்டின் தனித்தன்மையும், அடையாளமும் அழிந்து வரும் வேளையில் இந்த அருங்காட்சியகம் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது.

இந்த மியூசியம் பல்வேறு பொருட்களை சேகரித்து, வகைப்படுத்தி, அவற்றைப் பற்றி முறையான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தச் செய்யும் இடமாக இருக்கிறது. இங்கு மானிடவியல், தாவரவியல், தொல்லியல், புவியியல், விலங்கியல், மற்றும் சிறுவர்களுக்கான ஓவியக்காட்சிக் கூடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணிவரையிலும், திங்கள் முதல் வியாழக்கிழமைகளிலும், இரண்டாம் சனிக்கிழமை தவிர பிற சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் தேசிய விடுமுறை நாட்களில் மட்டும் விடுமுறையில் இருக்கும். புகைப்படம் எடுப்பது இந்த மியூசியத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri