Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிருஷ்ணகிரி » ஈர்க்கும் இடங்கள் » கெலவாரபள்ளி நீர்த்தேக்கத் திட்டம்

கெலவாரபள்ளி நீர்த்தேக்கத் திட்டம், கிருஷ்ணகிரி

20

சென்னகேசவ மலைகளின் கிழக்குப் பகுதிகளில் ஊற்றெடுக்கும் பெண்ணையாற்றின் குறுக்கே கெலவாரபள்ளி நீர்த்தேக்க திட்டம் மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

இந்த அணைக்கட்டு அருகிலுள்ள விளை நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியையும் மற்றும் ஒசூரின் குடிநீர் தேவையைத் தீர்க்கும் இடமாகவும் உள்ளது. 331 கிமீ நீளமுடைய பெண்ணையாறு அதன் வழியில் உள்ள நகரங்களின் தண்ணீர் தேவைகள், விளைநிலங்களுக்கான நீர்ப்பாசனம், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் நீராதாரம் ஆகியவற்றை வழங்கும் புண்ணிய நதியாக விளங்குகிறது.

13.5 மீட்டர்கள் உயரமாக இருக்கும் இந்த அணையைச் சுற்றிலும் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அமைதியும், இயற்கையும் குடி கொண்டிருப்பதற்காக மட்டுமல்லாமல், எண்ணற்ற பறவைகளின் சரணாலயமாகவும் இந்த அணைக்கட்டு விளங்குகிறது.

பெருமளவிலான இடம் பெயரும் பறவைகளுக்கு கெலவாரபள்ளி அணைக்கட்டும், அதனை சுற்றியுள்ள பகுதிகளும் தான் வசிப்பிடம். பல்வேறு வகையான உள்ளூர் பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகளை உடைய கெலவாரபள்ளி நீர்த்தேக்கம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் இடமாகும்.

பறவைகளை கவனிப்பவர்களுக்கு கெலவாரபள்ளி நீர்த்தேக்கத்தைப் போன்ற அருமையான இடமோ, அங்கு எழும் பறவைகளின் சத்தங்களைப் போன்றோ சிறந்த அமைவிடம் எதுவும் இல்லை.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவுரும் அனுபவிக்க வேண்டிய அருமையான இடம் கெலவாரபள்ளி அணைக்கட்டாகும். இங்கிருக்கும் அனைத்து விளையாட்டு வசதிகளுடனான பூங்கா குழந்தைகளை இயற்கையின் மடியில் மகிழ்விக்கும் கலையை இன்றும் செய்து வருகின்றது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue