Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிருஷ்ணகிரி » ஈர்க்கும் இடங்கள் » ராயக்கோட்டா

ராயக்கோட்டா, கிருஷ்ணகிரி

20

ராயக்கோட்டை என்று அழைக்கப்படும் ராயக்கோட்டாவில் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமான ராயக்கோட்டா கோட்டை அமைந்துள்ளது. பாலக்காட்டு பீடபூமியின் எல்லையை வரையறுக்கும் இடமாக ராயக்கோட்டா மலை உள்ளது. பழமையான கோட்டையாக அறியப்படும் இது, பல்வேறு யுத்தங்களை சந்தித்துவிட்டு, அழிவுகளுடன் காட்சி தந்து கொண்டிருக்கிறது.

சாலை வழியாக செல்ல முடியாத இந்த கோட்டைக்கு செல்ல இரண்டு மணி நேரம் மலைகளில் ஏற வேண்டும். இந்த மலையேற்றம் சுற்றுலா வருபவர்களின் சந்தடி மிகுந்த நகர வாழ்க்கைக்கு பெரும் நிவாரணமாக திகழ்ந்து வருகிறது.

பாதி வழியில் இருக்கும் ராயக்கோட்டா குகைக் கோவில் இந்த கோட்டையின் அளவிற்கு பழமையான இடமாகும். போகும் வழியில் இருக்கும் செங்கற்களால் கட்டப்பட்டு நின்று கொண்டிருக்கும் இடங்கள் ஆயுதங்களும் மற்றும் குதிரைகளும் வைக்கப்படும் இடங்களாகும்.

இந்த கோட்டையின் உச்சியில் வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய விளக்கில் உள்ளூர்வாசிகள் திருவிழாக் காலங்களில் விளக்கேற்றி வைப்பார்கள். இந்த கோட்டையின் உச்சியில் நின்றபடியே நகரத்திற்குள் செல்லும் ரயில் பாதைகள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளைக் காண முடியும்.

ராயக்கோட்டை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் கிடையாது, எனினும் தனிமையை விரும்புவோரும், சற்று உடற்பயிற்சி செய்ய நினைப்பவர்களும் விடுமுறை நாட்களில் வந்து செல்ல ஏற்ற இடமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun