Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» கிருஷ்ணாநகர்

கிருஷ்ணாநகர் -கலாச்சார மற்றும் கலை மையம்!

8

கிருஷ்ணாநகர்  மேற்கு வங்கத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நகரம் ஆகும். கிருஷ்ணாநகரின் பாரம்பரியம் அதை ஆராய்ந்து அனுபவிப்பதற்கு உகந்த ஒரு நகராக்கியுள்ளது.

ஜலங்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் இருந்து சுமார் 132 கி.மீ. தொலைவில் உள்ளது.  கிருஷ்ணநகரின் பாரம்பரியம் மற்றும் பழமை அதை ஒரு உன்னத சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது.

இந்த பகுதியை ஆட்சி புரிந்த ராஜா கிருஷ்ணா சந்திரா ராய் நினைவாக  இந்த  இடம்  உள்ளூர் மக்களால் க்ஹொர் என்று அழைக்கப்படுகின்றது. ராஜா கிருஷ்ணா சந்திரா ராய் கலை மற்றும் கட்டிடக்கலையில் ஆர்வம் கொண்ட ஒரு பெரிய புரவலராக இருந்தார்.

இந்த இடத்தின் செழித்த கலை மற்றும் கலாச்சாரம் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்கின்றது. களிமண் மாடலிங் மற்றும் மத திருவிழாக்கள் போன்றவை இங்கு மிக முக்கியமாக அம்சமாக விளங்குகின்றன.

காலநிலை, கைவினை மற்றும் பாரம்பரிய சமையல்!

இங்கு மிதமான காலநிலை நிலவுவதால், சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். கிருஷ்ணநகரின் கலாச்சாரம் மற்றும் இலக்கியம், அதன் சுற்றுலாவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த நகரின் மக்கள் இலக்கிய பரிமாற்றம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். ஆனால் இந்த நகர கலாச்சாரத்தை கட்டிக் காப்பதில் க்ஹுர்னி என்கிற துணை நகரம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இங்கு, களிமண்ணில் அதிசயங்களை உருவாக்கும் கலைஞர்கள் வசிக்கும்  ஒரு காலனியை காணலாம். இங்குள்ள திறந்த வெளி பட்டறைகளில், பிரபலமான தெய்வ மாதிரிகளைத் தவிர மனித உருவங்கள், பழங்கள் மற்றும் விலங்குகளின் களிமண் மாதிரிகள் நேர்த்தியுடனும்  கலைநயத்துடனும் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

களிமண் மாடலிங்கில்  ஒரு அரிய பாரம்பரியத்தை பேணிக்காத்து வரும் கிருஷ்ணநகர் மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு பெருமைக்குரிய  கலை மையமாக திகழ்கிறது. உள்ளூர் கலைஞர்களின் திறமை ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கின்றது.

கிருஷ்ணநகர், இனிப்பு காதலர்கள் செல்ல வேண்டிய ஒரு முக்கிய இடம் ஆகும்.  இங்குள்ள பாரம்பரிய இனிப்பு தயாரிப்பாளர்களான ஹல்வைகர்ஸ் அல்லது மொய்ரஸ் பிரபலமான வங்காள இனிப்புகளான ஸர்ப்ஹஜ மற்றும் ஸர்புரியாவை தவிர்த்து ஏராளமான இனிப்புகளை தயாரித்து வழங்குகின்றனர்.

கிருஷ்ணாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

ராஜ்பாரி அரண்மனை அல்லது கிருஷ்ணநகர் அரண்மனை அதனுடைய பாரம்பரிய கட்டிடக் கலைக்காக பெயர் பெற்றது. இந்த அரண்மனை ஏராளமான சுற்றுலா பயணிகளை தன்னுள் ஈர்க்கின்றது.

குறிப்பாக இந்த அரண்மனையில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள் பயணிகளை பெரிதும் கவர்கின்றது. இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஜுலன் மேளா மற்றும் ஹோலி அல்லது பாரொ டோல் திருவிழாக்கள் மிக முக்கியமானது.

இங்குள்ள டிகி என்று அழைக்கப்படும் நீர் சூழ்ந்த வரலாற்று நினைவுச்சின்னத்தின் மைய முற்றத்தில் அழகான துர்கா கோவில் ஒன்று உள்ளது.

வழிபாட்டு இடங்கள்

இங்குள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதனுடைய கம்பீரத்திற்கும் அது அமைந்துள்ள அழகிய சுழலுக்காகவும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது.

குறிப்பாக இங்குள்ள சுற்றுச் சுவர்களில் அமைந்துள்ள சில அசாதாரண சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் காண்போரின் மனதை மயக்குகின்றது. இந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை 1886-88 ல் கட்டப்பட்டது.

இங்கு கிறிஸ்துவின் வாழ்க்கையை சித்தரிக்கும் எண்ணெய் ஓவியங்கள் காண்போரின் கருத்தை கவர்கின்றது. மேலும் இங்கு பல்வேறு மர ஃப்ரெஸ்சொஸ்கள் காணப்படுகின்றன.

இங்குள்ள வளாகத்தில் ஒரு பிராட்டஸ்டன்ட் சர்ச் உள்ளது. அந்த சர்ச் வளாகம் வண்ணமயமான கண்ணாடி ஓவியங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணநகரில் காணப்படும் பல்வேறு மத கோயில்கள் மற்றும் மடாலயங்கள் இந்த நகரின் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகின்றது.

இங்குள்ள ஜலாங்கி காட் பிற மத இடங்களான மாயாபூர், நபட்விப், மற்றும் ஸ்ஹந்திப்பூர் போன்று பிரபலமாக திகழ்கிறது. இவற்றைத் தவிர இங்குள்ள கல்லூரி பவன் மற்றும் பொது நூலகம் போன்றவையும் பயணிகளை பெரிதும் கவர்கின்றன. தோட்டக்கலை ஆர்வலர்கள் இங்குள்ள பாஹட்ருபுர், மூர்ஷிதாபாத் மற்றும் பித்ஹுஹ  டொஉரி காடு போன்றவற்றிற்கு சுற்றுலா செல்லலாம்.

கிருஷ்ணாநகரை பார்பதற்காண சிறந்த நேரம்

குளிர்காலமே கிருஷ்ணாநகர் சுற்றுலாவிற்கு உகந்த பருவம் ஆகும்.

கிருஷ்ணாநகரை எவ்வாறு அடைவது?

கிருஷ்ணாநகர் ரயில் மற்றும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணாநகர் சிறப்பு

கிருஷ்ணாநகர் வானிலை

சிறந்த காலநிலை கிருஷ்ணாநகர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கிருஷ்ணாநகர்

  • சாலை வழியாக
    NH34 இல் அமைந்துள்ள கிருஷ்ணநகர் , நபட்விப் உடன் கிருஷ்ணநகர் வழி 8 மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாநகரை அடைய கஸெஸ்ஹொரி, மா லக்ஷ்மி, புபு, டரமா, கமிலியன், ஸ்ஹரிச, மா மானஸா, பிஸ்வருப், நந்தினி, புருராஜ், ஸ்ஹர்டாசி, மா துர்கா போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    உள்ளூர் ஈமு ரயில்கள் கொல்கத்தா அடைவதற்கு உதவுகின்றது. அங்கிருந்து டாக்ஸியைப் பயன்படுத்தி கிருஷ்ணாநகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கிருஷ்ணாநகருக்கு அருகில் கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து டாக்ஸி மூலம் கிருஷ்ணாநகரை எளிதில் அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed