Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» குச்சிப்புடி

குச்சிப்புடி - விடாது ஒலிக்கும் சலங்கை ஒலி!

5

உலக பாரம்பரிய நடனங்களில் தனித்துவமான பாணியை கொண்ட குச்சிப்புடி நடனத்தின் பிறப்பிடமாக அறியப்படும்  குச்சிப்புடி கிராமம், வங்களா விரிகுடா மற்றும் கிருஷ்ணா நதியின் அருகிலும், அரவணைப்பிலும் பேரழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சீமாந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிறிய கிராமம் குச்சிப்புடி நடனத்தின் தோற்றத்தால் அந்த நடன வடிவத்தின் பெயராலேயே குச்சிப்புடி என்று அழைகப்படுகிறது.

குச்சிப்புடி கிராமம் ஹைதராபாத்திலிருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலும், மச்சிலிப்பட்டணம் மற்றும் மொவ்வா மண்டலத்திலிருந்து முறையே 25.6, 6.4 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது.

குச்சிப்புடி கிராமத்தின் அருகில் விஜயவாடா, கொனசீமா, குண்டூர், அமராவதி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நகரங்களுக்கெல்லாம் சுற்றுலா வரும் பயணிகள் குச்சிப்புடி நடனத்தின் பிறப்பிடமாக திகழும் குச்சிப்புடி கிராமத்துக்கு தவறாமல் வந்து செல்கின்றனர்.

மேலும் குச்சிப்புடி கிராமத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் உண்டவல்லி குகைகள், ராஜீவ் காந்தி தேசிய பூங்கா, ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயில், மொகல்ராஜ்புரம் குகைகள், கனக துர்கா கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.

குச்சிப்புடி கிராமத்துக்கு அருகில் விஜயவாடா நகரின் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் அமைந்திருப்பதால் வெகு சுலபமாக குச்சிப்புடி கிராமத்தை அடைந்து விட முடியும். எனினும் சாலை மூலமாக குச்சிப்புடி கிராமத்தை அடைவதுதான் சிறந்தது. அவ்வாறு சாலை வழியாக வருவதென்றால் ஹைதராபாத் அல்லது விஜயவாடா நகரங்களின் வழியாக குச்சிப்புடி கிராமத்துக்கு வர வேண்டும்.

குச்சிப்புடி சிறப்பு

குச்சிப்புடி வானிலை

சிறந்த காலநிலை குச்சிப்புடி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது குச்சிப்புடி

  • சாலை வழியாக
    சீமாந்திராவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் குச்சிப்புடி கிராமத்துக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    குச்சிப்புடி கிராமத்துக்கு வெகு அருகிலேயே விஜயவாடா ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடனும் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு எந்த சிரமமுமின்றி குச்சிப்புடி கிராமத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    குச்சிப்புடி கிராமத்தின் அருகாமை விமான நிலையமாக விஜயவாடா உள்நாட்டு விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து மும்பை, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பின் வாடகை கார்கள் மூலம் சுலபமாக குச்சிப்புடி கிராமத்தை அடையலாம். மேலும் விஜயவாடா மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலமும் நீங்கள் குச்சிப்புடி கிராமத்தை அடைய மூடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue