கடல் மட்டத்திலிருந்து 3600மீ உயரத்தில் உள்ள இந்த சந்த்ரகானி பாஸ் பார்வதி பள்ளத்தாக்குப்பகுதியில் அமைந்துள்ளது. பார்வதி பள்ளத்தாக்கு பகுதியானது மலானா மற்றும் குலு பள்ளத்தாக்குகளுடன் இணைந்துள்ளது.
ரம்மியமான இயற்கை அழகுக்காட்சிகள் நிறைந்த இந்த பாதை நல்லதொரு மலையேற்றப்பாதையாக அமைந்துள்ளது. இந்த பாதைக்கு கீழே உள்ள மலானா எனும் சிறு கிராமம் மலையேற்றப்பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக காணப்படுகிறது. மே மற்றும் அக்டோபர் மாதங்கள் இந்த பாதையின் வழியே மலையேற்றம் செய்ய உகந்தவையாகும்.



Click it and Unblock the Notifications