ஃபிஷிங் எனப்படும் மீன் பிடிக்கும் பொழுது போக்கு அம்சமும் குலு பகுதியில் பிரசித்தமாக உள்ளது. இங்குள்ள ஆற்று நீரில் பழுப்பு மற்றும் பலவண்ண ட்ரௌட் மீன்கள் கிடைக்கின்றன.
இவற்றை தூண்டில் மூலம் பிடிக்கலாம். குலு நகரத்திலிருந்து 58 கி.மீ தூரத்தில் தீர்த்தன் ஆற்றங்கரையில் உள்ள பஞ்சர் எனும் இடம் தூண்டில் மீன்பிடிப்புக்கு பிரசித்தி பெற்ற ஸ்தலமாக உள்ளது. நக்கார் என்ற மற்றொரு இடமும் மீன்பிடிப்புக்கு உகந்ததாக அமைந்துள்ளது.
இந்த இடங்கள் மட்டுமல்லாமல் ரசோல் மற்றும் கட்ராயின் என்ற இடங்களிலும் பயணிகள் மீன்பிடிப்பில் ஈடுபடலாம். ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலமும் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலமும் மீன்பிடிப்புக்கு ஏற்றதாக உள்ளது.



Click it and Unblock the Notifications