பாராகிளைடிங், குலு

பாராகிளைடிங் அல்லது பாராசூட் பறப்பு எனப்படும் சாகச பொழுதுபோக்கு அனுபவத்துகாக நாடெங்கிலும் குலு பிரசித்தி பெற்றுள்ளது. இந்தியாவிலேயே இது போன்ற பாராகிளைடிங் ஸ்தலம் வேறு இல்லை என்று சொல்லுமளவுக்கு இப்பகுதியில் இந்த பொழுதுபோக்கு அம்சம் பரவலாக பயணிகளுக்காக நடத்தப்படுகிறது. 

பிர், சோலங் மற்றும் மஹாதேவ் ஆகிய தளங்களிலிருந்து இந்த பாராகிளைடிங் பறப்பு துவங்கப்படுகிறது. ஃபிப்ரவரி முதல் ஜூன், செப்டம்பர் முதல் நவம்பர் ஆகிய மாதங்கள் பாராகிளைடிங் பொழுதுபோக்குக்கு ஏற்றவையாக உள்ளன. மணாலியில் உள்ள ஹிமாச்சல் மவுண்டனீரிங் இன்ஸ்டிடியூட் அண்ட் அலைட் ஸ்போர்ட்ஸ் எனும் மையத்தில் இது சம்பந்தமான தகவல்களை பயணிகள் பெறலாம்.

Please Wait while comments are loading...