கர்னூல் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் இந்திய தொல்லியல் துறையால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கர்னூல் பிரதேசத்திலிருந்து ஏராளமான வரலாற்று கால அரும்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் ரீதியாககர்னூல் நகரம் முக்கியமான ஸ்தலமாக குறிப்பிடப்படுகிறது.
எனவே கர்னூல் நகரத்திலேயே ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. ஹந்த்ரி ஆற்றின் கரையில் கர்நூல் மருத்துவக்கல்லூரிக்கு அருகில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள சங்கமேஸ்வரம், ஆலம்பூர், ஷீசைலம் போன்ற கோயில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட உடைந்த சிலைகள், உள்ளூர் தளபதிகள் பயன்படுத்திய போர்க்கருவிகள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கொட்லா விஜய் பாஸ்கர் ரெட்டி நினைவுச்சின்னத்துக்கு அருகிலேயே இந்த கர்னூல் மியூசியமும் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications